வேகத்தடையால் தூக்கி வீசப்பட்டு பிரிந்த உயிர்.."இதனால என் மகன் உயிரே போச்சு" | Erode

x

ஈரோடு மாவட்டம், பள்ளிபாளையம் அருகே வேகத்தடையில் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டடனர். ஆர்.என்.புதூரைச் சேர்ந்த அப்புசாமி செந்தாமரை தம்பதியின் மகன் சத்யானந்த், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, புதிய காவிரி ஆற்று பாலத்தின் மீது அமைக்கப்பட்டு இருந்த வேகத்தடை சரிவர தெரியாததால் தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் அவர் உயிரிழந்து விட்டதாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்