"மயானத்திற்கு தரும் முக்கியத்துவம், எங்களுக்கு இல்லையா" - கதறும் மக்கள்

x

ஈரோடு மாவட்டம் கன்னிமார்காடு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் இடத்தில், 5 ஏக்கரில் மயானம் அமைக்க, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள 5 ஏக்கர் காலி இடத்தில் காடையாம்பட்டி, திருவள்ளுவர் நகர், தொட்டியம்பாளையம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், திடீரென குடிசைகள் அமைத்ததாக தெரிகிறது. தகவலின்பேரில் குடிசைகளை அகற்ற போலீஸ் பாதுகாப்புடன் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரம் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள், தனிநபரின் தூண்டுதலால் பொதுமக்கள் போராட்டம் நடத்துவதாக விளக்கமளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்