Tasmac-ல் எக்ஸ்ட்ரா வசூல்.. பொங்கி எழுந்த `குடி'மக்கள் - ஈரோட்டில் பரபரப்பு

x

ஈரோட்டில் உள்ள அரசு மதுபான கடையில், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக, ஆன்லைன் மூலம் பணம் வசூல் செய்வதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாடிக்கையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு வெட்டுக்காட்டுவலசு மடிகார்காலனி பகுதியை சேர்ந்த தங்கவேல், அரசு மதுபான கடையில், குவாட்டர் பாட்டிலை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி வாங்க முற்பட்டார். அப்போது கடை ஊழியர்கள் கூடுதலாக 10 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக

கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தங்கவேல் புகார் மனு கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்