"வீட்டில் எதையும் பயன்படுத்த முடியவில்லை" எண்ணெய் கசிவால் கதறும் எண்ணூர் மக்கள்

x

சென்னையை அடுத்த எண்ணூர் சுற்று வட்டார பகுதிகளில், பத்து நாட்களை கடந்தும் கச்சா எண்ணெய் கசிவினால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்...

விரிவான தகவல்களை வழங்க இணைகிறார், எமது செய்தியாளர் தாயுமானவன்...

மிக் ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழை ஓய்ந்து 10 தினங்கள் கடந்தும் கச்சா எண்ணெய் பாதிப்பிலிருந்து மீளாத எண்ணூர் சுற்றுவட்டார பகுதி மக்கள்...

வெள்ள நீருடன் கலந்த எண்ணெய் கழிவுகளால் வாழ்வாதாரமும் சுகாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள்...

கண் எரிச்சல், தலைச்சுற்றல், தோல் அரிப்பு உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகளுக்கு தொடர்ந்து ஆளாகும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை....

பெருமழை ஓய்ந்தும் பெருவெள்ளம் வடிந்தும் கச்சா எண்ணெய் பாதிப்பால் தொடரும் அவலம்.

எர்ணாவூர், ஆதிதிராவிடர் காலனி, திருவீதியம்மன் கோவில் , சிவன் படை தெரு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்னமும் படிந்திருக்கும் கச்சா எண்ணெய் கழிவுகள்.

மழை வெள்ளத்துடன் கலந்த கச்சா எண்ணெய் கழிவுகளை வெள்ளம் வடிந்த நிலையில் தாமாகவே சுத்தம் செய்து கொண்ட குடியிருப்பு வாசிகள்.

வீடுகளுக்குள் படிந்த எண்ணெய் கழிவுகளை பொதுமக்களே சுத்தம் செய்து சற்றே இயல்பு நிலைக்கு திரும்பினாலும் தொடர்ந்து வீசும் பெட்ரோலிய நாற்றம் உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.

உணவு சமைத்து சாப்பிட்டால் கூட பெட்ரோல் நாற்றமே வீசுகிறது கருவாட்டு குழம்பு வைத்தாலும், பெட்ரோல் நாற்றம்தான் குமுறும் மக்கள் ..


Next Story

மேலும் செய்திகள்