தமிழகத்தை அதிர வைத்த சம்பவம் .. வெளியான முக்கிய தகவல்
திருச்செந்தூர் முருகன் கோவில் யானை தெய்வானை தாக்கி இருவர் உயிரிழந்ததை தொடர்நது அதனை புத்துணர்வு முகாமிற்கு அனுப்புவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்தது. ஆனால் அது குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட 5 குழுவினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு கண்காணிப்பு பணி தொடரும் எனவும் தெறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தெய்வானையை புத்துணர்வு முகாமிற்கு வெளிமாவட்டங்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்படவில்லை என்று கோவில் அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது. மேலும், நவத்திருப்பதி கோவில்களில் உள்ள மூன்று யானைகள் பராமரிக்கப்படும் இடத்திற்கு தெய்வானையை கொண்டு செல்ல வலியுறுத்தியுள்ளதாகவும் கோவில் அறங்காவலர் குழு கூறியுள்ளது.
Next Story