குட்டிகளை மீட்க போராடிய தாய்.. உதவிக்கரம் நீட்டிய தீயணைப்பு வீரர்கள் - Feel GOOD காட்சி
மழை காரணமாக நெல்லை ஜங்ஷன் பகுதியில் உள்ள ஸ்ரீபுரம் கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அப்போது இரண்டு குட்டி நாய்கள் வெள்ள நீரில் நனைந்தபடி நின்றிருந்தன. அருகே இருந்த தாய் நாய், குட்டிகளை காப்பாற்ற போராடியதை கண்ட அப்பகுதி வாசிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தந்தனர். விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் போராடிய குட்டி நாய்களை மீட்டு தாய் நாயிடம் ஒப்படைத்தனர்.
Next Story