4கிமீ மலைப்பாதையில் நடைபயணம் - தருமபுரி ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி செயல்
பழங்குடியின மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கரடு முரடான பாதையில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆட்சியரும் உயரதிகாரிகளும் நடந்தே சென்றனர். போதகாடு ஊராட்சி மாரியம்மன் கோவிலூரில் இருந்து தொடங்கி சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் உள்ள பெரியேரிக்காடு வரை நடந்து சென்று பழங்குடியின மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ஆட்சியர் சாந்தி, மாணவர்கள் பலகிலோமீட்டர் தூரம் தினம் நடந்து வந்து கல்வி பயிலத் தேவையில்லை என்றும், பள்ளி கல்லூரி விடுதிகளில் தங்க ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளதாகவும் விழிப்புணர்வு வழங்கினர். அத்துடன் விரைவில் சாலை அமைக்க ஏற்பாடுகள் செய்வதாகவும் ஆட்சியர் சாந்தி உறுதி அளித்தார்.
Next Story