மிரளவிடும் சைஸ்..அணையில் காத்திருந்த அதி பயங்கரம்..அடுத்து நடந்த ஷாக்கிங் சம்பவம் | Crocodile
செங்கம் சாத்தனூர் அணையில் ராட்சத முதலை நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தென்பெண்ணெய் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கிடையே ராட்சத முதலை ஒன்று சாத்தனூர் அணை மீது ஏறி படுத்திருந்ததை அணை பணியாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதனை கம்பை வைத்து ஆற்றுக்குள் விரட்டி அடித்தனர். சாத்தனூர் அணை மீது ராட்சத முதலை படுத்திருந்த சம்பவம் சுற்றுலா பயணிகளை மிகுந்த அச்சமடைய செய்துள்ளது.
Next Story