வேலையை விட்டு நீக்கியதால் - வெட்டி கூறுபோட்ட பயங்கரம் - வெறியை தீர்த்த முன்னாள் ஊழியர்

x

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்துள்ளது ஆதியூர் கண்மாய்.

கரையின் ஒற்றையடி பாதை ஓரமாக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை போலீஸார் சல்லடையாகச் சலித்துக் கொண்டிருந்தனர்.

கந்தல் கோலமாக வெட்டுப்பட்டுக் கிடந்த சடலத்தை கைபற்றிய போலீஸார், அதை ஒரு டிஜிட்டல் பேனரில் மூட்டை கட்டி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யபட்ட சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீஸார் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

கொல்லப்பட்டவர் தர்மராஜ். 60 வயதான இவர் பொதுப்பணித்துறையில் பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது இந்த ஆதியூர் கண்மாயில் மீன் பிடி குத்தகை எடுத்து லாபம் பார்த்து வந்திருக்கிறார்.

தினமும் கண்மாய்க்கு வந்து அன்று பிடிக்கப்பட்ட மீன்களைச் சரிபார்த்துவிட்டுச் செல்வது வழக்கம். சம்பவம் நடந்த அன்றும் அப்படிதான் குளத்துக்கு வந்திருக்கிறார். மீன் பிடிப்பதை சுற்றி பார்த்த தர்மராஜ், அதன் பிறகு ஓய்வாக இந்த கூடாரத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறார்.

அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல், தர்மராஜை வெட்டிக்கூறு போட்டுவிட்டுத் தப்பித்து ஓடி இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

தர்மராஜுக்கு இருந்த எதிரிகளைப் பற்றி போலீசார் விசாரித்த போது தான்.

சில நாட்களுக்கு முன் இவரிடம் வேலை பார்த்த காவலாளியான கார்த்திக்ஸ்வரன் என்பவரின் பெயர் வெளி வந்திருக்கிறது.

தர்மராஜ் குத்தகைக்கு எடுத்த குளத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தவர் தான் கார்த்திக்ஸ்வரன்.

தர்மராஜ் வராத நேரத்தில் குளத்தை முழுகட்டுபாட்டில் வைத்திருந்த கார்த்திக்ஸ்வரன், பிடிக்கிற மீன்களில் கொஞ்சத்தைத் திருடி விற்பனை செய்துவந்திருக்கிறார்.

அதோடு, வெளியாட்களிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு அவர்களை மீன் பிடிபதற்கு அனுமதித்திருக்கிறார்.

இந்த விஷயம் ஒரு கட்டத்தில் தர்மராஜுக்கு தெரியவரவே , கார்த்திக்ஸ்வரனை கண்டித்ததோடு அவரை வேலையை விட்டு அனுப்பி இருக்கிறார்..

இதனால் முன்னாள் முதலாளி மீது கொலை வெறியில் இருந்த கார்திக்ஸ்வரன் சம்பவத்தன்று தரமராஜ் கண்மாய்க்கு வந்திருப்பதை அறிந்து, கஞ்சா போதையில் தனது நண்பர்களோடு சுத்துப்போட்டிருக்கிறார்.

கூடாரத்திற்குள் தனிமையில் உட்கார்ந்திருந்த தர்மராஜை அரிவாளால், கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

தலைமறைவாக இருக்கும் கார்த்திக்ஸ்வரனையும் அவரது நண்பர்களையும் தற்போது போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

முக்கிய குற்றவாளியை கைது செய்யதால் மட்டுமே , இந்த கொலைகான முழுகாரணமும் தெரியவரும்.


Next Story

மேலும் செய்திகள்