"கோவையில்..." முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்
தமிழக அரசின் அனைத்து சேவைகளையும் ஆன்-லைனில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், டிஜிட்டல் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோவையில் ஏ.ஐ. தகவல் தொழில்நுட்பவெளி நிறுவப்படும் என்றும் கூறினார்.
Next Story