இந்திய கம்யூனிஸ்ட் நூற்றாண்டு விழா..நல்லகண்ணுவுக்கு பாராட்டு | Chennai
சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கட்சிக்கொடியேற்றி நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைக்கிறார். நல்லகண்ணுவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட உள்ளது. நாளை டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி வரை, ஓராண்டு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் என, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
Next Story