தொழில் முதலீடாக ரூ.50 கோடி பெற்று மோசடி.. சென்னையில் அதிர்ச்சி
தொழிலதிபர் அபிஷேக் என்பவர், மருத்துவர் ரோஹித் மற்றும் அவரது சகோதரரும் சுபம் நிறுவனத்தின் உரிமையாளருமான ரோஷன் ஆனந்த் ஆகியோர் மீது மோசடி புகார் ஒன்றை அளித்தார். அதில், சொகுசு கார் வாங்கி தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் பெற்ற நிலையில், அதில் 48 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக குறிப்பிட்டார். இதேபோல், ஆயிரம் கோடி ரூபாய்க்கு அரிசி டெண்டர் பெற, அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டுமென கூறி சுமார் 42 கோடி பெற்று மோசடி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் சூழலில், ரோஹித், ரோஷன் ஆகியோர் சுமார் 8 கோடி ரூபாய் தொழில் முதலீடு பெற்று மோசடி செய்ததாக மீது சவுகார்பேட்டையைச் சேர்ந்த கௌதம் சந்த் என்பவர் புகாரளித்தார். இதுதொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து இருவரையும் தேடி வருகின்றனர்.