சென்னை அருகே குப்பைகளை எரிப்பதால் மக்களுக்கு சுவாச கோளாறு.. வெளியான ஷாக் தகவல்

x

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் இயற்கை உரம் தயாரிக்கும் நுன் உர செயலாக்க மையத்தில் எரிக்கப்படும் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும குப்பைகளால் அந்தப் பகுதி இரவு நேரங்களில் கரும்புகையுடன் காட்சியளிக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறு, கண் எரிச்சல் போன்றவை ஏற்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் அங்கு குப்பைகளை எரிப்பதை ஊராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்