"தூங்கிட்டு இருக்க நேரம் பார்த்து"இரவோடு இரவாக சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் -வெடித்த போராட்டம்

x

சென்னை வடபழனி 100 அடி சாலை பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நகர் தெருவில் கடந்த 40 ஆண்டுகளாக 10 வீடுகள் கொண்ட குடியிருப்பில் 8 குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர். அதில் சுதந்திர போராட்ட வீரரான ஜோதி கண்ணன் என்ற முதியவரும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடியிருப்பு வாசிகள் அனைவரும் மழையின் காரணமாக வேறு பகுதிக்கு சென்று தங்கி இருந்த நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி தனியாருக்கு சொந்தமான கட்டட நிறுவனம் ஒன்று ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வீடுகளை இடித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் நள்ளிரவில் வீடுகளை இடிக்க யார் அனுமதி கொடுத்தது என்ற கேள்வி எழுப்பி காவல்துறையிலும் புகார் தெரிவித்துள்ளனர். 40 ஆண்டுக்கு முன்னர் மறைந்த வேதகிரி என்ற நபர் தாங்கள் தற்போது குடியிருக்க கூடிய பகுதியை அரசுக்கு கால்வாய் வழி தடத்திற்காக எழுதிக் கொடுத்த நிலையில் பின்னர் வழக்குத் தொடர்ந்து அரசு அனுமதி உடன் தாங்கள் வசித்து வந்ததாகவும், மண்ணடியை சேர்ந்த கனி என்ற நபர் போலி பத்திரங்களை வைத்துக் கொண்டு இடத்தைக் கைப்பற்ற முயல்வதாக குற்றம் சாட்டும் அவர்கள், அரசு உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்