நடுவழியில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள்... செங்கல்பட்டில் பெரும் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ரயில்வே கேட் உடைந்து விழுந்ததால், 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டன. சோத்துப்பாக்கம் செய்யூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே கிராசிங்கை மூடும் போது கேட்டின் இரும்பு பைப் உடைந்து விழுந்ததால் சிக்னல் கிடைக்காமல் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தி வைக்கப்ப்பட்டது. இதேபோல, சர்க்கார் பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி ரெயில்வே கேட் சரி செய்யப்பட்டது. அடிக்கடி இது போன்ற கோளாறுகளால் ரெயில்வே பயணிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், ரெயில்வே மேம்பாலம் அமைப்பதே இதற்கு நிரந்தர தீர்வு எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story