படிக்கும் வயதில் அந்த மாதிரி வேலை..போலீசுக்கே ஷாக் கொடுத்த கயவர்கள்..காட்டிக்கொடுத்த சிசிடிவி
சதுரங்கப்பட்டினம் அரசு மதுபான கடையின் சுவற்றில் துவாரம் போட்டு குடிப்பதற்கு ஏற்ப அளவாக 5 குவாட்டர் பாட்டில்கள், ரூ.12 ஆயிரம் திருட்டு..
முகமூடி அணிந்து வந்த 20 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சி.சி.டி.வி. வெளியாகி அதிர்ச்சி!
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத வயல்வெளி பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு விற்பனையாளர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் 20 வயதுக்குட்ப்ட்ட 4 சிறுவர்கள் கடையின் பக்கவாட்டு சுவற்றை துலையிட்டு உள்ளே நுழைந்து 5 குவாட்டர் மதுபான பாட்டில்கள் மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.12 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றுள்ளனர் என கூறப்படுகிறது. முன்னதாக 4 சிறுவர்களும் மதுபான கடை எதிரே உயரத்தில் இருந்த சி.சி.டி.வி..கேமராவை உடைக்க முயற்சியும் செய்துள்ளனர். ஆனால் அதை உடைக்க முடியவில்லை. தங்களை யாரும் அடையாளம் தெரிந்து கொள்ளாத வகையில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு பக்கவாட்டு சுவற்றில் உளி, சுத்தியால் துவாரம் போட்டு உள்ளே சென்ற 4 சிறுவர்களும் குடிப்பதற்கு அளவாக 5 குவாட்டர் பாட்டிகள், கல்லாவில் இருந்த ரூ.12 ஆயிரம் ரொக்கத்தை திருடியும் எடுத்து செல்லும் காட்சி அம்மதுபான கடையின் முகப்பில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சதுரங்கப்பட்டினம் பகுதியை சேர்ந்த கஞ்சா போதையில் சுற்றும் சிறுவர்களாக இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சி.சி.டி.வி. பதிவான காட்சிகளின் அடிப்படையில் சதுரங்கப்பட்டினம் போலீசார் மதுபாட்டில்கள், பணத்தை திருடி சென்ற சிறுவர்களை தேடி வருகின்றனர்.