கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - தம்பதி பலி

x

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - தம்பதி பலி

ஆரணி அருகே கணியம்பாடி பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஸ்ரீதர் என்பவர், மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் திருவண்ணாமலை கோயிலுக்கு காரில் சென்றார். அப்போது திருவண்ணாமலையிலிருந்து வேலூர் நோக்கி வந்த ஆந்திரா பதிவெண் கொண்ட காரும், ஸ்ரீதர் சென்ற காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் ஸ்ரீதர், அவரது மனைவி சங்கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த அவரது பிள்ளைகள் அஜய், அனுஷ்கா, உள்ளிட்ட 7பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்