பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே திடீர் பரபரப்பு - காரணம்..!

x

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை கண்டித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி பாலக்காடு சாலை, உடுமலை சாலை, மத்திய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, உடுமலை சாலை, கோவை சாலையில் ஆகிய பகுதிகளில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அகற்றினர். மத்திய பேருந்து நிலையம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது, நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் காவல் துறையினரிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்