மேல்மருவத்தூர் பக்தர்கள் பயணித்த பேருந்து கவிழ்ந்து விபத்து..உள்ளிருந்த பயணிகளின் நிலை.?
கர்நாடகாவில் இருந்து வேலூர் நோக்கி வந்த மேல்மருவத்தூர் பக்தர்கள் பயணித்த பேருந்து கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். இதில் 17 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து தனியார் பேருந்து மூலம் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மருவத்தூர் நோக்கி பயணித்தபோது, பேரணாம்பட்டு அடுத்த பத்தலபள்ளி மலைப்பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோரம் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
Next Story