"அழுக்கை நீ வந்து துடைப்பியா..?தரமற்ற முறையில் அரசு மருத்துவமனை கட்டிடம்..கடிந்து கொண்ட எம்.எல்.ஏ

x

தரமற்ற முறையில் கட்டப்படும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர், அதிகாரிகளை கண்டிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையானது தற்போது மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக 23.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது டைல்ஸ் அமைக்கும் பணிகள் உட்பட பல பணிகளில் குறைபாடு இருப்பதை கவனித்த ஈஸ்வரன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து கண்டித்தார். மேலும், அதிகாரிகளிடம் அவர் சத்தமிட்டு பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்