லஞ்ச ஒழிப்புத் துறை போட்ட ஸ்கெட்ச்! - கையும் களவுமாக சிக்கிய இணை சார் பதிவாளர்!

x

ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற இணை சார் பதிவாளர் மற்றும் இடைத்தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் தனது இடத்தை பதிவு செய்து ஆவணம் தர ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். மேலும் இடத்தினை விற்பதற்காக ஆவணம் செய்து தருமாறு ஆவடி இணை சார் பதிவாளர் அமுல்ராஜிடம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்... இந்நிலையில் ஆவண சரிபார்ப்பு செய்வதற்கு அமுல்ராஜ் 1 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்காததால் அமுல்ராஜ் கால தாமதம் செய்து வந்துள்ளார். இதனிடையில் இடைத்தரகராக அணுகிய சார் பதிவாளர் அலுவலகம் அருகிலேயே கடை நடத்தி வரும் தென்னரசு என்பவர் தான் அனைத்து விதமான ஆவணங்களும் வில்லங்கச் சான்று பத்திரப்பதிவு போன்ற பணிகளை செய்து வருவதாகவும், சார் பதிவாளரிடம் நான் பேசி வேலையை முடித்துத் தருவதாகவும் கூறியுள்ளார்... இதனால் அதிர்ச்சி அடைந்த கோடீஸ்வரன் திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை தென்னரசிடம் கொடுத்து அனுப்பி உள்ளார். தென்னரசு அமுல்ராஜிடம் பணம் கொடுக்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அமுல்ராஜைப் பிடித்துள்ளனர்... 7 மணி நேரம் நடந்த கிடிக்கிப்பிடி விசாரணையில் குற்றம் உறுதியானதை அடுத்து அமுல்ராஜ், தென்னரசு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்