"STக்கெல்லாம் வீடு கொடுக்க கூடாதா.." - RI ஆடியோவால் சர்ச்சை - கண்ணீர் வடிக்கும் இருளர் பெண்கள்
செங்கல்பட்டு மாவட்டம் சின்ன வெண்மணி கிராமத்தில் சுமார் ஐந்து தலைமுறைகளாக 20க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக நிலம் இல்லாததால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தற்காலிக குடிசைகளிலும், அரசு கட்டடங்களிலும் வசிக்கும் அவலம் நீடிக்கிறது. தங்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என இருளர் இன மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதுகுறித்து அண்மையில் பெண் ஒருவர் வருவாய் ஆய்வாளரிடம் முறையிட்டுள்ளார். அப்போது, இந்த கிராமத்தில் இடம் வழங்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தங்களுக்கு இடமளிக்கக் கூடாது என கிராம மக்கள் கூறுவதாகவும் வருவாய் ஆய்வாளர் ஷோபனா பேசுவது போன்று ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Next Story