128 பயணிகளுக்கும் கிளம்பிய பீதி..கிளம்பும் போது பைலட்டுக்கு அதிர்ச்சி | Chennai Airport

x

சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில்,கடைசி நேரத்தில் இயந்திர கோளாறு இருந்தது கண்டறியப்பட்டதால், 136 பேர் உயிர் தப்பினர். பிற்பகல் 1.30 மணியளவில், 128 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் தெரிவித்ததையடுத்து, விமானம் மீண்டும் நடைமேடைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பழுது சரிபார்க்கப்பட்டு, பிற்பகல் 3 மணியளவில் ஏர் இந்தியா விமானம் பயணிகளுடன் கோவைக்கு புறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்