கோயிலில் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட கட்டிட மேஸ்திரி

கோயிலில் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட கட்டிட மேஸ்திரி
x

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதி​யில், கட்டிட மேஸ்திரி ஒருவர், கோயிலுக்குச் சென்று பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

புவனேஸ்வரி பேட்டை பகுதியைச் சேர்ந்த மனோகரன், என்பவருக்கு, மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள கெங்கையம்மன் கோவிலுக்குச் சென்று, கற்பூரம் ஏற்றிவிட்டு பிரார்த்தனை செய்தார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மனோகரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, மனோகரன் எதற்காக கழுத்தை அறுத்துக் கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்