கடனை செலுத்த வழியில்லாததால் விவசாயி தற்கொலை
நத்தம் அருகே விவசாயத்திற்காக வாங்கிய கடனை அடைக்க வழியில்லாததால் விரக்தியடைந்த விவசாயி, மா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோபால்பட்டி அடுத்த செட்டிப்பட்டி கன்னிமார் குட்டு பகுதியில் வசித்து வருபவர் கருப்புச்சாமி. விவசாயியான இவர் விவசாய தேவைகளுக்காக பலரிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் கடனை செலுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார். கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு நெருக்கடி தந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், மா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story