தோட்டத்தில் பூ பறித்த போது நின்ற மூச்சு... நினைத்து பார்க்காத கொடூர சாவு

x

திருவண்ணாமலை மாவட்டம் புதுமல்லவாடி அருகில் உள்ள ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. 45 வயதான இவர், தனது விவசாய நிலத்தில் பூக்கள் பயிரிட்டுள்ளார். விநாயகமூர்த்தி தினமும் காலை வேளையில் தனது நிலத்தில் பூ பறிக்க செல்வது வழக்கம். இந்த நிலையில், இவரது விவசாய நிலத்தில் மின்வயர் ஒன்று அறுந்து விழுந்துள்ளது. மின்வாரிய ஊழியர்கள் இதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம் போல தன் விவசாய நிலத்திற்கு சென்ற விநாயகமூர்த்தி கீழே விழுந்து கிடந்த மின்வயரை மிதித்துள்ளார். அப்போது மின்சாரத்தால் தாக்கப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், உயிரிழந்தவரின் உடலை திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள புது மல்லவாடி மின்வாரிய அலுவலகத்தின் எதிரே உள்ள சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உறவினர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத நிலையில், போராட்டக்காரர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு காவல் வாகனத்தில் ஏற்றப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்