போதையில் ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர் - பரபரப்பு
கோவை அரசு மருத்துவமனை முன்பு, போதையில் ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. மேல் சட்டை இன்றி ஒருவர் ஏறி நின்றதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி, கீழே இறங்க செய்தனர். விசாரணையில், கூடலூர் நந்தட்டியை சேர்ந்த சசி என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக மாறியது.
Next Story