இளம்பெண்ணை கவ்விய சிறுத்தை.. நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி.. தொடரும் ரத்த வேட்டை..! குலை நடுங்கிய வேலூர்

x

பட்டப்படிப்பை முடித்து விட்டு பெற்றோருக்கு பக்க பலமாக இருந்த இளம்பெண்ணை ஆட்கொல்லி சிறுத்தை வேட்டையாடி கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது...

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் மேல்மாயில் அடுத்துள்ள துருவம் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம், வளர்மதி தம்பதியின் இளைய மகள் தான் அஞ்சலி...

மதிய வேளையில் வீட்டிலிருந்த அஞ்சலி, இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார், அப்போது தான் அரங்கேறியது அந்த கோரச் சம்பவம்..

வனப்பகுதியில் இருந்த ஆட்கொல்லி சிறுத்தை ஒன்று அஞ்சலியை வேட்டையாடிக் கொன்றுள்ளது.

இந்த சம்பவம் அரங்கேறிய போது, அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் சிலர் பதறியடித்து ஓட்டம் பிடித்ததாக கூறப்படும் நிலையில், அந்த பதைபதைப்பான சம்பவத்திற்கு பிறகு, மற்றொரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வீரிசெடிபள்ளி கொல்லைமேடு என்ற பகுதியில் சதாசிவம் என்பவரது வீட்டின் அருகே சிறுத்தை புகுந்து அங்கிருந்த கோழியை தூக்கி சென்றுள்ள சம்பவம் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்