உடலில் டீசலை ஊற்றிக்கொண்ட நபரால் பரபரப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல்நிலையம் அருகே டீசல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழபூசாரிபட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் மாத தவணைக்கு சரக்கு வாகனம் வாங்கியுள்ளார். சரிவர தவணையை கட்டாததால், சரக்கு வாகனத்தை தனியார் நிதி நிறுவனத்தினர் பறிமுதல் செய்ய முயற்சித்துள்ளனர். இந்நிலையில், மணப்பாறை காவல் நிலையம் அருகே வந்த சரவணன் இந்த விபரீத செயலில் இறங்கினார். அசம்பாவிதம் நேர்வதற்கு முன் இளைஞரை போலீசாரால் மீட்டனர்.
Next Story