பழிக்கு பழி நடந்த வெறிச்செயல்.. வாண்ட்டடாக வந்து சரண்டர் ஆன 3 சிறுவர்கள்.. திருச்சியை அதிரவிட்ட சம்பவம்

x

ஜீயபுரம் அருகே கொடியாலம் காந்தி நகரை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் மதிர்விஷ்ணு, அரசு பேருந்தில் சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்றார். திண்டுக்கரை அருகே பேருந்து வந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேரில் ஒருவர், பேருந்தில் ஏறி விஷ்ணுவை கீழே தள்ளி விட்டுள்ளார். பின்னர் 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள்மனை உள்ளிட்ட ஆயுதங்களால் மதிர் விஷ்ணுவை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியது. இதில் மதிர்விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஆண்டு கோகுல் என்ற நபரை விஷ்ணு தொடர்புடைய கும்பல் வெட்டிக் கொன்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மதிர் விஷ்ணு, அண்மையில் ஜாமினில் வந்த நிலையில், அவரை நோட்டமிட்ட கும்பல், பழிக்குப்பழியாக இக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் சகோதரர் ஆகாஷ், அவரது 17 வயது சகோதரர் ஒருவர்,17 வயதுடைய 2 பேர் மற்றும் மணிமாறன் என மொத்தம் 5 பேர் இந்த கொலை சம்பவத்தை அரங்கேறிய நிலையில், மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்