நாட்டின் முதல் திருநங்கை வேட்பாளர் காலமானார் | Bharathi Kannamma | Thanthitv

x

நாட்டின் முதல் திருநங்கை வேட்பாளராக 2014 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மதுரையை சேர்ந்த பாரதி கண்ணம்மா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 63. மதுரை தியாகராஜர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை முடித்து, மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர் திருநங்கை பாரதி கண்ணம்மா. 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மதுரையில் சுயேச்சையாக போட்டியிட்ட திருநங்கை பாரதி கண்ணம்மா, எய்ட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். திருநங்கைகள் உரிமைகள், வேலைவாய்ப்புக்கான உரிமைகள் குறித்து இயக்கங்களை நடத்தி பேசிவந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாரதி கண்ணம்மா காலமான நிலையில், அவரது மறைவுக்கு பிரபல பரதக்கலைஞர் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்