மாணவ மாணவிகளுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ் | Thanthitv
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்செய்தியாளார்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சிறப்பு மேலாண்மை ஆகியவற்றை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். எந்தெந்த பள்ளிகளில் எத்தனை கழிவறைகள் தேவை என்பது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மூலம் தகவல் திரட்டப்பட்டுள்ளதாக கூறினார். விரைவில் ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.
Next Story