போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவர்கள் - தஞ்சையில் பரபரப்பு
தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் பார்வை திறன் குறை உடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 150 மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு கடந்த 5 ஆண்டுகளாக வைரவல்லி என்பவர் வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர் மாணவ, மாணவிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வந்த நிலையில் இவரை மாற்றிவிட்டு வேறொவரை வார்டனாக நியமித்ததால் கொதித்தெழுந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வார்டன் வைரவல்லி பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் தேர்வை புறக்கணிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Next Story