இரவில் நடக்கும் அற்புதம்..! தங்கம் போல ஜொலிக்கும் தஞ்சை பெரிய கோயில் | Thanjavur Periya Kovil

x

தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் 1039 ஆம் ஆண்டு சதய விழா, இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதையொட்டி, தஞ்சை பெரிய கோயில் வளாகம், ராஜராஜ சோழனின் சிலை மற்றும் மாநகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல் ஜொலிக்கின்றன. தமிழர்களின் கட்டட கலைக்கு பெருமை சேர்க்கும் தஞ்சை கோயிலை கட்டிய ராஜராஜ சோழன், ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததாக கருதப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளை அரசு சதய விழாவாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்