புரளும் பல கோடிகள் - மக்கள் கூட்டத்தால் திணறும் தஞ்சை, நெல்லை

x

தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளதால், காலை முதலே பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். பொங்கல் பானைகள், அடுப்பு, கரும்பு, இஞ்சி கொத்து, மஞ்சள் கொத்து, அச்சு வெல்லம் உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மக்கள் வாங்கி வருகின்றனர். அதிகளவு விற்பனை நடைபெறுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காமராஜ் மார்க்கெட்டில் 4 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்