பணத்தை கொட்டிய ஆயிரக்கணக்கான மக்கள் - ரூ.400 கோடி மெகா மோசடி...தேடப்பட்ட முக்கிய நபர் அதிரடி கைது

x

தஞ்சையில் கமாலுதீன் என்பவரின் ராஹத் டிராவல்சில் இயங்கும் பேருந்துகள் மீது முதலீடு செய்தால், மாதந்தோறும் ஈவுத்தொகை வழங்கப்படும் என அறிவித்ததன் பேரில், ஏராளமானோர் முதலீடு செய்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, கமாலுதீன் இறந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினர் முதலீடு செய்தவர்களுக்கு உரிய தொகையை வழங்கவில்லை என புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த டிராவல்ஸ் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக ஆயிரக்கணக்கானோர் புகார் அளித்தனர். இதனை அடுத்து, கமாலுதீனின் மனைவி, சகோதரர் உள்ளிட்ட 13 பேர் கடந்த 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய நபரான கமாலுதீனின் மைத்துனர் காத்தாரில் இருந்த நிலையில், தற்போது நாடு திரும்பிய அவரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்