"இந்த நாய்களுக்கு சின்ன வைரஸ் வந்தாலும் தாங்காது.." - தஞ்சை கலெக்டர் பரபரப்பு பேச்சு | Thanjavur
தஞ்சையில் அடிபட்டு பராமரிக்கப்பட்டு வந்த செல்லப்பிராணியை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தத்தெடுத்துக் கொண்டார்... தஞ்சாவூா் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் சார்பில் “உறவில்லாத பிராணிகளுக்கு உறவைத் தேடும்“ நிகழ்வு நடைபெற்றது. இந்த திட்டத்தை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். அப்போது தெருவில் அடிபட்டு காயமடைந்து மிருகவதை தடுப்பு சங்கத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நாயை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தத்தெடுத்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தார்... தொடர்ந்து வீட்டில் வளர்க்க இயலாத, பராமரிக்க முடியாத செல்லப்பிராணிகளை பலர் தத்து கொடுத்தனர். அத்துடன் செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
Next Story