1,00,008 ருத்ராட்சம் கொண்டு ஐயப்பனுக்கு அலங்காரம் திடீரென அருள் வந்து ஆடிய பெண்..வைரல் காட்சிகள்
தஞ்சையில் ஶ்ரீபாலசாஸ்தா வழிபாட்டு குழு சார்பில் 15 ஆம் ஆண்டு மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. இதில் லிங்கத்தின் மீது ஐயப்பன் சிலை வைக்கப்பட்டு, ஒரு லட்சத்து 8 ருத்ராட்சத்தால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு 15 ஆவது மண்டல அபிஷேக விழா நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி ஐயப்பனை வழிபட்டனர். அப்போது தரிசனம் செய்ய வந்த பெண்கள் சிலர் அருள் வந்து பக்தி பரவசத்தில் ஆடினர்.
Next Story