"கடை சாவியை கொடுக்க தயார்..! எங்கள் பணத்தை கொடுக்க தயாரா..?"தஞ்சையில் வியாபாரிகள் போராட்டம்

x

தஞ்சை மாவட்டம் காமராஜ் காய்கறி மார்க்கெட்டில், வாடகை செலுத்தாத கடைகளின் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்ததால், வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜ் மார்க்கெட்டில் சுமார் 500 கடைகள் உள்ள நிலையில், பெரிய கடைகளுக்கு 18 ஆயிரம் ரூபாய் வரையும், சிறிய கடைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரையும் வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், வாடகை செலுத்த தவறிய சில கடைகளின் மின் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், முன் அறிவிப்பின்றி கடை மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்