தஞ்சை பெருவுடையாருக்கு 48 வகையான பேரபிஷேகம்.. மெய்சிலிர்த்த பக்தர்கள்

x

ராஜராஜ சோழனின் 1039 ஆம் ஆண்டு சதய விழாவையொட்டி, தமிழ் முறைப்படி தேவாரம் திருமுறை பாடி பெருவுடையாருக்கு 48 வகையான பேரபிஷேகம் நடைபெற்றது. மாமன்னர் இராஜராஜ சோழனின் சதய விழாவையொட்டி, திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி தமிழ் முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருமுறை வீதி உலா தஞ்சை மாநகர 4 ராஜவிதியில் நடைபெற்றது. பின்னர் இராஜராஜ சோழன் உலோகமாதேவி ஐம்பொன் சிலைகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முன்பாக, பெருவுடையார்க்கு திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி பால், மஞ்சள், சந்தனம், திருநீர், தேன், அரிசிமாவு, பொடி, நெய், தயிர், பன்னீர், எழுமிச்சை, பழச்சாறு, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், மூலிகைப் பொடிகள் உள்ளிட்ட 48 வகையான பேரபிஷேகம் 2 மணி நேரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்