டீச்சர் ரமணியை கொன்றது ஏன்? - காதலன் சொன்ன திடுக்கிட வைக்கும் வாக்குமூலம்

x

தஞ்சை மல்லிபட்டினத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்த தஞ்சை சின்னமலையைச் சேர்ந்த ரமணியை மதன் என்பவர் கடந்த 21ம் தேதி பள்ளி ஓய்வறையில் சென்று கத்தியால் குத்தி கொலை செய்தார்... வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது மதன் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்... இதையடுத்து,

ரமணியும் தானும் பல ஆண்டுகளாக காதலித்ததாகவும்

ரமணி இல்லாத வாழ்க்கையை தன்னால் ஒருபோதும் நினைத்து பார்க்க முடியாது என்றும் தெரிவித்த மதன், ரமணியுடன் பலமுறை திருமணம் குறித்து பேசியதாகவும் ஆனால் ரமணியோ பெற்றோர் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என மறுத்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்... வீட்டை விட்டு ஓடி விடலாம் என மதன் கூறியதற்கு ரமணி மறுத்ததால் ஆத்திரம் அடைந்து தனக்கு கிடைக்காத அவர் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று முடிவு எடுத்து கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். ரமணியை கொலை செய்து விட்டு தானும் த*கொலை செய்து கொள்ள தான் திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் கொலை செய்துவிட்டு செல்லும்போது ஆசிரியர்களும் மாணவர்களும் தன்னை பிடித்து விட்டதாகவும் மதன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்