துறவறம் மேற்கொண்டு மீண்டும் இல்லறம்..57 வயதில் ஆதீனத்தின் திடீர் கல்யாணம்.."
55 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட சூரியனார் கோயில் ஆதீனத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஒரு தரப்பும், பதிலுக்கு தன்னை யாரும் தகுதி நீக்கம் செய்ய முடியாது என சூரியனார் கோயில் ஆதீனமும் மோதி வருகின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..துறவறம் மேற்கொண்டு, பின் மீண்டும் இல்லறம் செல்லும் வகையில், 57 வயதான ஒரு ஆதீனத்தின் திடீர் திருமணம் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது.....
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் அருகேயுள்ள சூரியனார் கோவில் ஆதீனமான மகாலிங்க பரமாச்சாரியார் சுவாமிகள், 55 வயதான ஹேமா ஸ்ரீ என்பவரை கர்நாடகாவில் திருமணம் செய்து கொண்டதே இந்த சர்ச்சை...
கர்நாடகாவில் சைவ மடம் இல்லை எனவும், இந்நிலையில் அங்கு சைவ மடம் அமைக்க ஹேமா ஸ்ரீ இடம் கொடுத்ததாகவும், தொடர்ந்து அவரை மடத்தின் செயலாளராக நியமித்து திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார் மகாலிங்க பரமாச்சாரியார் சுவாமிகள்..
மேலும், தமிழகத்தில் ஒரு சில ஆதீனங்கள் திருமணம் செய்து கொண்டு ஆதீன கர்த்தர்களாக இருப்பதாகவும் தெரிவித்திருந்த அவர், சூரியனார் கோவில் ஆதீனத்தின் மடாதிபதியாக தான் நீடிப்பதாகவும் தெரிவித்திருந்தார்...
இந்நிலையில்தான், மகாலிங்க பரமாச்சாரியார் சுவாமிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கூறி
ஆதீன ஸ்ரீகாரியங்கள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர்...
கூடவே, சூரியனார் கோயில் ஆதீனத்திற்கு சொந்தமான சுமார் 1500 கோடிக்கும் மேலான சொத்துக்களை கைப்பற்ற ஆதீனத்தை அப்பெண் திருமணம் செய்திருப்பதாகவும் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்..