``2 உசுர எடுத்துட்டாங்க..மருமக உடல காணோம்.. பிறந்த பிள்ளைய கண்ல காட்டல'' -
துவரங்குறிச்சியை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி சந்தியா. இவர் பிரசவத்திற்காக பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சந்தியாவிற்கு பிரசவ வலி ஏற்பட குழந்தை இறந்து பிறந்ததாக கூறப்படுகிறது. மேலும், சந்தியாவின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்தியாவும் உயிரிழந்துள்ளார். இதனால், அத்திரம் அடைந்த உறவினர்கள், உடலை ஆம்புலன்ஸிலேயே வைத்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும், மருத்துவமனையின் அலட்சியத்தால் தாய், சேய் உயிரிழந்ததாக கூறி, மருத்துவமனைக்குள் புகுந்து அடித்து, உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனை முன்பு தொடர்ந்து திரண்டு வரும் உறவினர்களால் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையம் அருகேயும் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.