முறைகேட்டில் சிக்கிய தலைமை காவலருக்கு கட்டாய விருப்ப ஓய்வு - பரபரப்பில் தஞ்சை பாபநாசம்
தஞ்சை பாபநாசம் அருகே முறைகேடாக தேர்வு எழுதிய தலைமை காவலருக்கு கட்டாய ஒய்வு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சதீஷ்குமார் பேராவூரணி காவல் நிலையத்தில் கடந்த 2003ல் காவலராக இருந்த போது, அப்போது நடைபெற்ற உதவி ஆய்வாளர் தேர்வில் செல்போனை வைத்துக் கொண்டு முறைகேடாக தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத். அவருக்கு கட்டாய ஓய்வு அளித்துள்ளார். சதீஷ்குமார் தற்போது கபிஸ்தலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story