தனியார் பஸ்ஸை முந்த முயன்ற அரசு பஸ்..இளைஞருக்கு இரக்கம் காட்டிய எமன் - மிரளவிடும் காட்சிகள்
தஞ்சை பட்டுக்கோட்டை அருகே தனியார் பேருந்தை முந்த முயன்ற அரசுப் பேருந்தால் இளைஞர் ஒருவர் 2 பேருந்துகளுக்கிடையில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பும் பதைபதைப்பூட்டும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது... முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது... அப்போது பரத் என்ற இளைஞர் சாலையைக் கடக்கச் சென்ற போது, அரசுப்பேருந்து தவறான முறையில் தனியார் பேருந்தை முந்த முயன்றது. இதில் 2 பேருந்துகளுக்கும் இடையில் அந்த பரத் சிக்கிக் கொண்டார்... நல்வாய்ப்பாக பரத் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்... இந்த விபத்து பதிவான அதிர வைக்கும் காட்சிகளைப் பார்க்கலாம்...
Next Story