திடீர் கோளாறு.. திணறிய பயணிகள்.. தாம்பரத்தில் பரபரப்பு
சிக்னல் கோளாறு காரணமாக குறைவான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டதால், தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே இரவு நேரத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எழும்பூரில் இருந்து தாம்பரம் செல்ல வேண்டிய மின்சார ரயில்கள் காலதாமதமாக சென்றடைந்தன. இதனால் பணி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காக, தாம்பரம் ரயில் நிலையத்தில் காத்திருந்த மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
Next Story