திருச்சியில் நள்ளிரவில் சாலையை மறித்து தாளக்குடி கிராம மக்கள் போராட்டம்
திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் சீரான மின்சாரம் வழங்காததால் பொதுமக்கள் நள்ளிரவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த மறியல் போராட்டத்தால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
