"இந்த மாதிரி உடைகளை அணிந்து திருச்செந்தூர் கோயிலுக்கு வரக்கூடாது" - வெளியான முக்கிய அறிவிப்பு

x

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், சாதி ரீதியான உடைகள் அணிந்து வர அனுமதி இல்லை என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட போலீசார், பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், சாதி ரீதியான உடைகள் அணியவோ, கொடிகள் கொண்டு வரவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை கோவிலுக்கு எடுத்து வரக்கூடாது எனவும், மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்