அந்த பாலமுருகனே நேரில் வந்தது போல.. உலகே வியக்கும் தைப்பூச காட்சிகள்
மலேசியா முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பினாங்கு(penang) தீவில் உள்ள தண்ணீர்மலை முருகன் கோயிலில் தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது. வழி நெடுகிலும் தமிழ் மற்றும் சீன பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி முருகனை வழிபட்டனர்.
இதேபோல், ஜோகோர்(Johor)சுப்பிரமணியர் கோயிலில் தைப்பூச திருவிழா களைக்கட்டியுள்ளது. ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Next Story