27 பி' பஸ் - பெயரை கேட்டதும் கதிகலங்கும் மக்கள்.. அரசு பேருந்தில் திக் திக் பயணம் | Tenkasi
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில், பழுதான அரசு பேருந்தில் மாணவர்கள் மற்றும் பெண்கள் உயிரை பணயம் வைத்து பயணித்து வருகின்றனர். ஆலங்குளம் வழித்தடத்தில் இயக்கப்படும் தடம் எண் "27 பி" பேருந்தில், நடுப்பக்கத்தில் உள்ள இருக்கையின் அருகே பெரிய துவாரம் உள்ளது. இதை தற்காலிகமாக தகரத்தை வைத்து அடைத்தாலும், அது பெயர்ந்து காணப்படுகிறது. இதில் சிறு குழந்தைகள் மற்றும் பயணிகளின் உடைமைகள் விழவும் வாய்ப்புள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், விரைந்து சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story